தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குடோனில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூவர் படுகாயம்

குடோனில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூவர் படுகாயம்

குடோனில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூவர் படுகாயம்


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.ஆர். நகர்: பீஹாரை சேர்ந்த பப்லு. கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறார். பானிபூரி வியாபாரம் செய்கிறார். பணிக்காக ராஜராஜேஸ்வரி நகரில், குடோனை வாடகைக்கு பெற்றுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு, வியாபாரம் முடிந்து குடோனை பூட்டிவிட்டு, பப்லு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு இங்கிருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது.

குடோன் முழுதும் காஸ் பரவியது. நேற்று காலை பப்லு கதவை திறந்தவுடன், சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் பப்லு, பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமம்மா மற்றும் 9 வயது சிறுவன் பலத்த காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், குடோனில் தீயை கட்டுப்படுத்தினர். ஆர்.ஆர்.நகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us