/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' வழக்கு: முதல்வர் மனு மீது நவ., இரண்டாவது வாரம் விசாரணை 'முடா' வழக்கு முதல்வர் சித்தராமையா மனு மீது நவ., இரண்டாவது வாரம் விசாரணை

ADDED : செப் 05, 2025 04:50 AM
பெங்களூரு: தன் மீது 'முடா' வழக்கு விசாரணைக்கு நடத்த கவர்னர் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய கோரி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு, நேற்று நீதிபதிகள் அனு சிவராமன், ராஜேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் அட்வகேட் ஜெனரல் சசிகரன் ஷெட்டி வாதிடுகையில், 'மேல்முறையீடு மனுவை இறுதியாக விசாரிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு நீதிபதிகள், 'இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை தேதியில், மற்ற மனுக்களை நாங்கள் பட்டியிடவில்லை. எனவே, இம்மனுவை நவம்பர் முதல் வாரத்தில் விசாரிக்கலாம்' என்றனர்.
அதற்கு 'முடா' தரப்பு வக்கீல் ரவிவர்ம குமார், 'நவம்பர் இரண்டாவது வாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.