/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முலாம் பழம் விலை விவசாயிகள் ஏக்கம்
/
முலாம் பழம் விலை விவசாயிகள் ஏக்கம்
ADDED : ஏப் 19, 2025 11:11 PM

தங்கவயல்: முலாம் பழம் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
தங்கவயல் தாலுகா, என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீடுமாக்கன ஹள்ளி கிராமத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி, விவசாயிகள் முலாம் பழம் பயிரிட்டிருந்தனர்.
மூன்று மாதங்களாக தேவையான தண்ணீர், உரம், மருந்து தெளித்து விவசாயிகள் பாதுகாத்து, வளர்த்து வந்தனர். பழம் அறுவடைக்கு தயாரானது. ஆனால் உரிய விலை கொடுத்து வாங்க ஆளில்லை.
ஒரு கிலோ 2 ரூபாய்க்கு கூட விலை போகவில்லை. சீசன் பழம் என்பதால் தேவை அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்த்து விவசாயிகள் விளைவித்தனர். ஆனால், இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர் ஆர்வம் காட்டவில்லை.
கோலார் மாவட்டத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமாக இப்பழம் விளைந்துள்ளது. அறுவடை செய்யாததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களில் ஆடு மாடுகளை மேய விட விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

