/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இரும்பு பைப்புகள் திருட்டு நகராட்சி கமிஷனர் தலைமறைவு
/
இரும்பு பைப்புகள் திருட்டு நகராட்சி கமிஷனர் தலைமறைவு
இரும்பு பைப்புகள் திருட்டு நகராட்சி கமிஷனர் தலைமறைவு
இரும்பு பைப்புகள் திருட்டு நகராட்சி கமிஷனர் தலைமறைவு
ADDED : ஏப் 16, 2025 06:25 AM
உத்தரகன்னடா : இரும்பு பைப்புகள் திருட்டு குறித்து நகராட்சி கமிஷனரிடம் போலீசார் விசாரிக்க சென்ற போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தர கன்னடாவில் உள்ள சிர்சி நகரத்திற்கு, கெங்ரே ஓடையில் இருந்து தண்ணீர், இரும்பு பைப்புகள் மூலம் செல்கிறது. இந்த தண்ணீரை நம்பியே சிர்சியில் வாழும் மக்கள் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பைப்புகள் பழுதடைந்து விட்டதால், ஆங்காங்கே நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனால், 2023ல் புதிய பைப்புகள் அமைக்கப்பட்டன. பழைய இரும்பு பைப்புகள் பயன்படுத்தப்படாமல் போனது.
இந்நிலையில், நகரில் உள்ள சில பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்தன. அப்போது, பயன்படுத்தப்படாத பைப்புகளை அகற்ற வேண்டியிருந்தது.
இதற்காக சில மாதங்களுக்கு முன், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பைப்புகளை அகற்றி, விற்பனை செய்து கொள்ளும் வகையில், நகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியது.
இந்த டெண்டரை, ஷிவமொக்காவை சேர்ந்த ஜக்ரியா என்பவர், 6 லட்சம் ரூபாய்க்கு எடுத்தார்.
இந்நிலையில், 900 மீட்டர் நீளமுள்ள, 116க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகள் சட்டவிரோதமாக தரையில் இருந்து எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த பைப்புகளை அகற்றுவதற்கு, நகராட்சியிடம் இருந்து அவர் உரிமம் பெறவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சிர்சி கிராமப்புற போலீஸ் நிலையத்தில், ஒப்பந்ததாரர் ஜக்ரியா மீது சில கவுன்சிலர்கள் புகார் கொடுத்தனர். நகராட்சி கமிஷனருக்கு தெரியாமல் நடந்திருக்காது என குற்றம் சாட்டினர்.
இது குறித்து போலீசார், நகராட்சி கமிஷனர் காந்தராஜு, பொறியாளர்கள் பிரசாந்த், சுபியன் ஆகியோரிடம் விசாரணை நடத்த சென்றனர்.
ஆனால் அவர்கள், தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவத்திற்கு சிர்சி நகராட்சி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரதீப் ஷெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
'இது குறித்து விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை என்றால், நான் உட்பட ஏழு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வோம்' என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

