ADDED : மார் 30, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீதர்: தங்கையை காதலித்த நபரை, கல்லை போட்டு கொலை செய்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
பீதர் மாவட்டம், பசவகல்யாண் நிரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் பிரதர், 25. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிரசாந்த்தை சந்தித்து, 'தங்கையுடன் பழக வேண்டாம்' என, இளம்பெண்ணின் சகோதரர்கள் எச்சரித்தனர்.
அப்போது வாய்த்தகராறு முற்றி, பிரசாந்த்தை கல்லைப் போட்டு சகோதரர்கள் கொலை செய்தனர்.
பசவகல்யாண் ரூரல் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.