/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனாம்பாவை தரிசித்த முஸ்லிம் பெண்
/
ஹாசனாம்பாவை தரிசித்த முஸ்லிம் பெண்
ADDED : அக் 11, 2025 11:00 PM
ஹாசன்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, தரிசனம் அளிக்கும் ஹாசனாம்பாவை ஒரு முஸ்லிம் பெண் தரிசனம் செய்தார்.
ஹாசனின் ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். அக்டோபர் 9ம் தேதி ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டது; இம்மாதம் 23ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பிகையை தரிசிப்பர். அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் வருகை தருவர்.
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஹசீனா, நேற்று தன் தோழி பீதா மஞ்சுளாவுடன் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்தார். ஹாசன், சக்லேஸ்புராவின் உருடி கிராமத்தில் வசிக்கும் இவர், ஹாசனாம்பா மீது அதிக பக்தி கொண்டவர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஹாசனாம்பாவை தரிசனம் செய்கிறார்.