எஸ்.டி.பி.ஐ.,க்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் காங்., - எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் நம்பிக்கை
எஸ்.டி.பி.ஐ.,க்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் காங்., - எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் நம்பிக்கை
ADDED : ஏப் 08, 2026 04:31 AM

தாவணகெரே: ''எஸ்.டி.பி.ஐ.,க்கு முஸ்லி ம்கள் ஓட்டு போட மாட்டார்கள்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தாவணகெரேயில் நேற்று அளித்த பேட்டி:
தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த சாதிக் பயில்வானை சமாதானப்படுத்தும் பொறுப்பு, எனக்கு கொடுக்கப்பட்டது.
அதை திறம்பட செய்து உள்ளேன். முஸ்லிம்கள், 23 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்களில், 13 பேரிடம் பேசி போட்டியில் இருந்து விலக செய்து உள்ளேன். இங்கு பிரசாரம் செய்ய சென்ற எனக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும், எனக்கும் எந்த அறிமுகமும் இல்லை. ஆனாலும், என்னை அன்போடு வரவேற்றனர். இளைஞர்களும் ஆதரவு கொடுத்தனர். தாவணகெரே தெற்கில் எஸ்.டி.பி.ஐ., அமைப்பும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. முஸ்லிம்கள் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
பா.ஜ., சந்தர்ப்பவாத கட்சி. அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம் எப்போதும் வேண்டும். அதிகாரத்திற்காக முஸ்லிம்களை வெறுக்கின்றனர்.
அவதுாறு பரப்புகின்றனர். அவர்களுக்கு தேவை என்றால், முஸ்லிம்கள் வீட்டிற்கு சென்று ஓட்டு கேட்கின்றனர். தாவணகெரே தெற்கில் வெற்றி பெறுவோம் என்று, பா.ஜ., தலைவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். இந்த நம்பிக்கை தகர்க்கப்படும்.
இவ்வாறு அ வர் கூறினார்.
