/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊழல் குறித்த ஆடியோவில் இருப்பது என் குரல் தான்! காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்
/
ஊழல் குறித்த ஆடியோவில் இருப்பது என் குரல் தான்! காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்
ஊழல் குறித்த ஆடியோவில் இருப்பது என் குரல் தான்! காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்
ஊழல் குறித்த ஆடியோவில் இருப்பது என் குரல் தான்! காங்., - எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் திட்டவட்டம்
ADDED : ஜூன் 21, 2025 11:13 PM

பெங்களூரு: ''வீட்டு வசதித்துறையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு வீடுகள் வழங்குவது உண்மை தான். ஆடியோவில் இருப்பது என் குரல் தான்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் உண்மையை கூறியுள்ளேன். ஆடியோவில் இருப்பது என் குரல் தான். என் தொகுதியில் உள்ள ஏழைகளுக்கு வீடு தாருங்கள் என, நான் பட்டியல் அளித்தேன். வீட்டு வசதித்துறைக்கு நான்கு கடிதங்கள் எழுதினேன். ஆனால் வீடு கிடைக்கவில்லை.
பஞ்சாயத்து தலைவர் பட்டியல் கொடுத்து, வீடுகள் பெற்று வந்தார். வீட்டு வசதித்துறையில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, வீடு கிடைக்கிறது. வீட்டு வசதித்துறையில் ஊழல் நடக்கிறது. முதல்வர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.
முதல்வர் சித்தராமையா, என் குற்றச்சாட்டு குறித்து, எதுவும் கேட்கவில்லை. என்னை அழைத்தால் நேரில் சென்று முதல்வரிடம் விளக்கம் அளிப்பேன். என்ன கூற வேண்டுமோ, அதை கூறுவேன்.
மேலிடத்தை நான் எதற்காக சந்திக்க வேண்டும்? நான் அந்த அளவுக்கு வளரவில்லை. வீட்டு வசதித்துறையில் ஊழல் நடக்கவில்லை என்பது உண்மையென்றால், அமைச்சர் ஜமீர் அகமது கான், விசாரணை நடத்தட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை மறுக்கும் வகையில், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
வீட்டு வசதித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றஞ்சாட்டிய, எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீலை, நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து, அவருக்கு நானும், முதல்வரும் புத்திமதி கூறுவோம். நேற்று மீண்டும் அதையே கூறியதை, என்னால் ஏற்க முடியாது.
பி.ஆர்.பாட்டீல் என்ன பேசினார் என்பதே, எனக்கு புரியவில்லை. இதை முதல்வரும் கவனித்துள்ளார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர் எடுப்பார்.
வீடுகள் கட்டிக்கொள்ள 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, எந்த அமைச்சராவது லஞ்சம் கேட்பாரா? பி.ஆர்.பாட்டீல் என்ன அர்த்தத்தில் பேசினாரோ தெரியவில்லை. அவர் குற்றஞ்சாட்டுவது போன்று, எந்த ஊழலும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.