sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 950 கி.மீ., சைக்கிள் பயணம் அசத்திய மைசூரு 'அத்லெட்' குழு 

/

 950 கி.மீ., சைக்கிள் பயணம் அசத்திய மைசூரு 'அத்லெட்' குழு 

 950 கி.மீ., சைக்கிள் பயணம் அசத்திய மைசூரு 'அத்லெட்' குழு 

 950 கி.மீ., சைக்கிள் பயணம் அசத்திய மைசூரு 'அத்லெட்' குழு 


ADDED : நவ 14, 2025 05:12 AM

Google News

ADDED : நவ 14, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இது நம் அனைவருக்கும் தெரிந்தாலும் கூட பலரும் உடற்பயிற்சிகள் செய்வதில்லை. இதற்கு பல காரணங்களை சொல்லும் வழக்கத்தை கையாண்டு வருகிறோம். இப்படி எல்லாம் இருக்கக்கூடாது, உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் மைசூரு அத்லெட் கிளப் செயல்பட்டு வருகிறது.

மைசூரில் உள்ள புகழ்பெற்ற கிளப்களில் ஒன்றாக 'மைசூரு அத்லெட் கிளப்' செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் சமீபத்தில் மைசூரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து அசத்தி உள்ளனர். அதுவும் இந்த பயணத்தில் பங்கேற்ற அனைவரும் 40வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது சுவாரசியமான விஷயமாகும்.

15 பேர் குழு இந்த குழுவின் சார்பில் 15 பேர் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனர். 'பிட் இந்தியா' எனும் முழக்கத்துடன் தங்கள் பயணத்தை கடந்த 1ம் தேதி மைசூரில் துவங்கினர். மைசூரில் இருந்து சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம், காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருச்செந்தூர் வழியாக பயணித்து கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியை அடைந்தனர். மொத்தம் 950 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து உள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 135 கி.மீ., பயணம் செய்தனர். ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை பயணித்து உள்ளனர்.

இவர்கள் தாங்கள் செல்லும் வழியில் பார்க்கும் இளைஞர்களிடம் சைக்கிள் ஓட்டுவது, மொபைல் போன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடியே சென்றனர்.

கட்டாயம் இந்த குழுவில் மோகன், 75, சஹஸ்ரநாம் சுப்பிரமணியம், 75, தனஞ்சயா, 70, பாபு கமலாகர், 65, வேத மூர்த்தி, 65, ரமேஷ் நரசய்யா, 62, ரவி முனுசாமி, 62, தீபக், 61, முத்துகுமரன், 55, மஞ்சுநாத், 53, வேணுகோபால், 52, ஹர்ஷா, 48, தயானந்தா, 47, ஷிவானந், 45, பூனாச்சா, 42 ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களில் 12 பேர், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் இவர்கள் தங்கள் உடலையும் கட்டுக்குள் வைத்து, மற்றவர்களுக்கும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுகளை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us