/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா உணவு திருவிழா கூடுதலாக 3 நாட்கள் நீட்டிப்பு
/
மைசூரு தசரா உணவு திருவிழா கூடுதலாக 3 நாட்கள் நீட்டிப்பு
மைசூரு தசரா உணவு திருவிழா கூடுதலாக 3 நாட்கள் நீட்டிப்பு
மைசூரு தசரா உணவு திருவிழா கூடுதலாக 3 நாட்கள் நீட்டிப்பு
ADDED : செப் 12, 2025 06:57 AM
மைசூரு: இந்தாண்டு தசராவுக்கு வ ரும் சுற்றுலா பயணியரை கவருவதற்காக, உணவு திருவிழாவின் நாட்கள் கூடுதலாக மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது .
இது தொடர்பாக, தசரா உணவு மேளா துணை கமிட்டி தலைவர் சந்திரசேகர் அளித்த பேட்டி:
மைசூரு தசரா திருவிழா செப்., 22ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதே காலகட்டத்தில் உணவு திருவிழாவும் நடக்கும். இம்முறை ஸ்டால்கள் வைக்க 250க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 120 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். உணவு திருவிழா நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று பொது மக்கள், ஸ்டால்கள் வைப்போர் இடமிருந்து கோரிக்கை வந்துள்ளது. எனவே, அக்., 5ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், உணவு திருவிழா 14 நாட்கள் நடக்கும். கூடுதலாக மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த, தனி மேடையும் அமைக்கப்படும். இதில், அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
மாவட்டம், தாலுகா அளவில் நடந்த பள்ளி மாணவ - மாணவியருக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி நடக்கும்.
உணவு திருவிழாவுக்காக அரசு சிறப்பு நிதி எதுவும் விடுவிக்கவில்லை. ஸ்டால்கள் வைக்க தேர்வாகும் நபர்களிடம் இருந்து வாடகை பணம் வசூலிக்கப்படும்.
சைவ உணவு ஸ்டாலுக்கு 50 ஆயிரம் ரூபாய்; அசைவ உணவு ஸ்டாலுக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கான செலவு, வாடகை பணத்தில் இருந்து செலவழிக்கப்படும். இம்முறை 12 நாட்கள் தசரா நடப்பதால், ஜம்பு சவாரி முடிந்த பின்னரும், உணவை சுற்றுலா பயணியர் ருசிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.