/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1,500 கிலோ கேக்கில் மைசூரு அரண்மனை
/
1,500 கிலோ கேக்கில் மைசூரு அரண்மனை
ADDED : செப் 23, 2025 11:45 PM

மைசூரு : கே க் கண்காட்சியில் 1,500 கிலோ எடையில் செய்யப்பட்டிருந்த மைசூரு அரண்மனை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தசராவை முன்னிட்டு, டினி சினி கிரியேஷன்ஸ் சார்பில் மைசூரு நகரின் சாமராஜபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயசாமராஜா கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கேக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில், 1,500 கிலோ எடையில் பிரமாண்ட மைசூரு அரண்மனை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதை, பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த லெனின் குர்மா, ரக் ஷித், ஹர்ஷிதா, சுபா, ஹேமா ஆகிய ஐந்து கலைஞர்கள் மூன்று மாதங்களாக உழைத்து உருவாக்கியிருந்தனர்.
அதுபோன்று, நால்வடி கிருஷ்ணராஜ உடை யார், தன் ஆட்சிக் காலத்தில் மாநிலத்துக்கு செய்த பங்களிப்புகளான கே.ஆர்.எஸ். அணை, பெரிய கடிகாரம், எச்.ஏ.எல்., தொழிற்சாலை, கிருஷ்ணாஜ உடையார் சிலை, இசைக்கருவிகள், புலி, கரடி, மான் என 20 வடிவமைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கேக்குகளை 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உருவாக்கி இருந்தனர். இதற்காக 70 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி அக்., 7ம் தேதி வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். ஒருவருக்கு 60 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேக் தயாரித்தவர்கள் கூறுகையில், 'கேக் கண்காட்சியை சுற்றிப் பார்க்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட கொடுக்கப்படாது. 'ஏசி'யில் வைக்கப்பட்டுள்ளதால் எந்த தீங்கும் இல்லை' என்றனர்.
கேக் கண்காட்சி ஏற்பட்டாளர் தினேஷ் கூறுகையில், ''நால்வடி கிருஷ்ணராஜ உடையார், தன் ஆட்சிக் காலத்தில் மைசூருக்கு பல பங்களிப்புகளை செய்தார். அவரது சேவையை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பர். அதை உறுதி செய்யும் வகையில், இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார்.