/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் கைது
/
பள்ளி சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் கைது
ADDED : ஜன 22, 2026 05:39 AM
ஹாசன்: பள்ளி மாணவியை வீடு வரை பின் தொடர்ந்து மிரட்டிய நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஹாசனின் பென்ஷன் மொஹல்லா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது தலையில், 'மங்கி குல்லா' அணிந்த மர்ம நபர் பின் தொடர்ந்தார். இதை கவனித்த மாணவி, அங்கிருந்து வேகமாக நடந்தபோது, அந்நபரும் வேகமாக நடந்தார்.
அச்சமடைந்த அவர், தன் வீட்டின் அருகில் சென்று வேகமாக ஓடி, வீட்டை கேட்டை திறந்து உள்ளே சென்றார். வீட்டில் தனது தாயிடம் விஷயத்தை கூறினார்.
இந்நேரத்தில் மாணவியை பின் தொடர்ந்த மர்ம நபர், வீட்டை கண்டுபிடித்தார். இதை பார்த்த மாணவியின் தாயார் கூச்சலிட்டார். அந்நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. சிறுமியினர் பெற்றோர் அளித்த புகாரை பதிவு செய்த போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நேற்று அந்நபரை கைது செய்தனர். அவர், யார், எப்பகுதியை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

