தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; பிப்ரவரி 10க்குள் அரசிடம் சமர்ப்பிப்பு 

 புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; பிப்ரவரி 10க்குள் அரசிடம் சமர்ப்பிப்பு 

 புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; பிப்ரவரி 10க்குள் அரசிடம் சமர்ப்பிப்பு 


ADDED : ஜன 22, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, பிப்ரவரி 10ம் தேதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்று, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.

கர்நாடகாவில் கடந்த 2013 - 2018ல் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக 156 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.

கடந்த 2023ல் முழு அறிக்கை அரசுக்கு கிடைத்தது. தற்போதும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியிலேயே அறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது.

முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு கூறினர். துணை முதல்வர் சிவகுமார், அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்த்தார்.

இதனால் காங்கிரஸ் மேலிடம் உத்தரவின்படி புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடந்தது. கணக்கெடுப்பு முடிந்த நிலையில் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்தது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பெங்களூரில் நேற்று கூறுகையில், ''புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, மதுசூதன் நாயக் தலைமையிலான குழு, இம்மாதம் இறுதி அல்லது பிப்ரவரி 10ம் தேதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்.

' 'இந்த அறிக்கை சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

பழைய அறிக்கைக்கு, லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us