sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்!: சித்து-சிவகுமார் பேச்சு தோல்வி

அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்!: சித்து-சிவகுமார் பேச்சு தோல்வி

அதிகார பகிர்வு விவகாரத்தில் நீடிக்கும் மர்மம்!: சித்து-சிவகுமார் பேச்சு தோல்வி


ADDED : நவ 30, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக நீடித்து வரும் மர்மத்துக்கு நேற்றும் முற்றுப்புள்ளி விழவில்லை. முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் நடத்திய பேச்சுக்கு பின், மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறி, அதிகார பகிர்வு விவகாரத்தில் தாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இருவருக்கும் இடையே நடந்த பேச்சு, தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் ஆட்சி அமைவதற்கு, மாநில காங்., தலைவராக இருக்கும் துணை முதல்வர் சிவகுமாரும் முக்கிய காரணம். அப்போதே அவர் முதல்வர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், சித்தராமையாவுக்கு இரண்டாவது முறையாக முதல்வர் பதவி கிடைத்தது. இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று மேலிட தலைவர்கள் முன்னிலையில் வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.

* குழப்பம்

சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு மாதமாக கூக்குரல் எழுப்பி வந்தனர். இதற்கு எதிராக முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்களை கூறியதால், மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டது.

ஆட்சி இயந்திரம் முடங்கியதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய துவங்கின. இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்பிய மேலிடம், 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என கட்டளையிட்டது.

அதன்படி, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள முதல்வரின் அரசு பங்களாவான 'காவிரி'யில் நேற்று காலை 9:30 மணிக்கு, துணை முதல்வர் சிவகுமாரை, சிற்றுண்டிக்கு வரும்படி, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். 10:00 மணிக்கு பின் தான், சிவகுமார் வந்தார்.

இந்த பேச்சின் போது, மேலிட உத்தரவுப்படி, முதல்வரின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணாவும் உடன் இருந்தார்.

* ரகசியம்

இட்லி, உப்புமா, தோசை, சட்னி, சாம்பார், கேசரிபாத், சிற்றுண்டியில் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியானது. சிற்றுண்டிக்கு பின், ஒரு தனி அறைக்கு சென்று ரகசிய பேச்சு நடத்தினர். வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரைமணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நீடித்தது.

அதன் பின், முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, முதல்வரும், துணை முதல்வரும், காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவதாக கூறி, அதிகார பகிர்வு குறித்த பிரச்னையை டில்லி தலைவர்களிடம் தள்ளிவிட்டுள்ளனர். இதன் மூலம், நேற்றைய சிற்றுண்டி ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்ததாக கருதப்படுகிறது.

* கார்கே - ராகுல்

சித்தராமையா, சிவகுமார் பேச்சு குறித்தும் அப்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்தும், மத்தியஸ்தம் வகித்த முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா, காங்., பொதுச்செயலர் வேணுகோபாலுக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளித்தார்.

இதையடுத்து, டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு, நேற்று மாலை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அவசரமாக வந்தார். கர்நாடகாவில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து, இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஓரிரு நாளில், சோனியாவுடனும், கர்நாடக தலைவர்களையும் அழைத்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது

- நமது நிருபர் -

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us