தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தசரா கொண்டாட்டத்தில் தலையிடாதீர்கள் அரசுக்கு மைசூரு பிரமோதா தேவி எச்சரிக்கை

தசரா கொண்டாட்டத்தில் தலையிடாதீர்கள் அரசுக்கு மைசூரு பிரமோதா தேவி எச்சரிக்கை

தசரா கொண்டாட்டத்தில் தலையிடாதீர்கள் அரசுக்கு மைசூரு பிரமோதா தேவி எச்சரிக்கை


UPDATED : அக் 26, 2026 12:02 AM

ADDED : அக் 25, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:02 AM ADDED : அக் 25, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''எங்களின் தசரா கொண்டாட்டத்தில் தலையிட்டால், நீதிமன்றத்திற்கு செல்வோம்,'' என, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அரசின் தலைமை செயலருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:

இந்த ஆண்டு மைசூரு தசராவின் போது, அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வஜ்ரமுடி சண்டையிட வந்த வீரர்களுக்கு 'பாஸ்' கொடுத்த அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் தான், இந்த ஆண்டு வஜ்ரமுடி சண்டை நடக்கவில்லை. தவறு செய்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்க அம்பாரி மன்னர் குடும்பத்தின் சொத்து. அரசுக்கு உரியது இல்லை. தங்க அம்பாரிக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் மைசூரு போலீஸ் கமிஷனர் அலட்சியமாக செயல்பட்டுள்ளார்.

'செல்பி' எடுக்கும் சாக்கில், போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினர், தங்க அம்பாரி பக்கத்தில் சென்றனர். இந்த விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டது சரியல்ல.

அரண்மனை வளாகத்தில் எங்கள் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து, அரசு நிகழ்ச்சிகளை நடத்த போலீஸ் துறை அனுமதி கொடுத்தது. இதன் மூலம் எங்கள் மத நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

தசராவின் முதல், 7 நாட்கள் அரண்மனை வளாகத்தில் எங்கு வேண்டுமென்றாலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின் போது நாங்கள் செய்ய வேண்டிய சடங்குகள், கொண்டாட்டம் உள்ளது.

இவற்றை தடுக்கும் வகையில் போலீசார் செயல்பட்டனர். இதே நிலை நீடித்தால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம்.

கடந்த, 45 ஆண்டுகளில் முதல்முறையாக, தங்க அம்பாரி சுமப்பது எந்த யானை என்று கடைசி நிமிடம் வரை எங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. ஜம்பு சவாரிக்கு, 5 நாட்களுக்கு முன், நானே வன அதிகாரிக்கு போன் செய்து, எந்த யானை ஜம்பு சவாரி சுமக்கிறது என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இதுவும் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் தசரா கொண்டாட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஆனால், இதை சாதாரணமாக நினைத்து அரசு புறக்கணிக்கிறது. எனது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us