'தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்'
'தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்'
UPDATED : அக் 26, 2026 12:01 AM
ADDED : அக் 25, 2026 11:44 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குப்பை கொட்டுகிறவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் கூறியதாவது:
வீடுகளில் சேரும் குப்பையை பெறுவதற்கு, நகராட்சியின் ஆட்டோக்கள் வீடுதோறும் வருகின்றன. வீட்டின் குப்பையை நகராட்சியின் ஆட்டோவில் கொடுக்காமல் நடைபாதைகள், தெருக்களில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, தெருக்கள், சாலைகளில் குப்பையை கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
