தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வசதி

 மைசூரு உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வசதி

 மைசூரு உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வசதி


ADDED : மார் 17, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு உயிரியல் பூங்காவில், விலங்குகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, தண்ணீர் தெளிப்பான், ஏர் கூலர் மற்றும் விசிறிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

மைசூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீசாமராஜேந்திர உடையார் பூங்கா; நாட்டின் முன்னணி உயிரியல் பூங்கா இது. ஒவ்வொரு ஆண்டும், 30 முதல் 35 லட்சம் சுற்றுலா பயணியர் இந்த பூங்காவை பார்வையிடுகின்றனர். இங்கு, 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றம் பறவைகள் உள்ளன.

பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, தற்போது கோடைக்கு ஏற்ப உணவு அளிக்கப்படுகிறது. அவற்றில் கொரில்லா, சிம்பன்சி உள்ளிட்ட குரங்குகளுக்கு தேங்காய் தண்ணீர், குளுக்கோஸ், ஓ.ஆர்.எஸ்., கரைசல், தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்றவை உணவாக வழங்கப்படுகின்றன.

கரடிகளுக்கு ஐஸ் கட்டி, நீர் நிறைந்த பழங்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன. கூடுதலாக, தாவர உண்ணி விலங்குகளுக்கு பச்சை புல், பச்சை இலைகள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன.

புலி, சிங்கம், சிறுத்தைகள் போன்ற மாமிச விலங்குகள் இருக்கும் இடத்தில், செயற்கை நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிறிய தொட்டிகள் அமைத்து, அதில் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளன. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் இந்த விலங்குகள், தண்ணீர் தொட்டியில் அமர்ந்து சூட்டை தணித்து கொள்கின்றன.

பறவைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க, அதன் கூண்டு அருகில் ஏர்கூலர்கள், மின் விசிறிகள் நிறுவப்பட்டு உள்ளன. கூடுதலாக, மான், யானைகள் போன்ற விலங்குகள் வாழும் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளன.

பூங்கா உதவி இயக்குநர் டாக்டர் சசிதர் கூறுகையில், ''கோடை காலத்தில் விலங்குகள் கடும் வெப்பத்தால் சோர்வாகி, குறைவான உணவையே உண்ணுகின்றன. எனவே, இந்நேரத்தில் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தண்ணீர் தெளிக்கும் கருவி, ஏர் கூலர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அத்துடன், உணவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. உணவளிக்கும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us