தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நாமஸ்மரன் - 2025' நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள் நடக்கிறது

'நாமஸ்மரன் - 2025' நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள் நடக்கிறது

'நாமஸ்மரன் - 2025' நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள் நடக்கிறது


ADDED : அக் 09, 2025 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹலசூரு: 'நாமஸ்மரன்' சார்பில் இன்று முதல் 12ம் தேதி வரை மூன்று நாட்கள், 23ம் ஆண்டு புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி, ஹலசூரு ஏரி அருகில் உள்ள முதலியார் சங்கம் அரங்கில் நடக்கிறது.

'நாமஸ்மரன்' சார்பில் ஆண்டிற்கு ஒரு முறை, புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 23வது ஆண்டு ஜெயந்தி நாளை துவங்கி மூன்று நாட்கள், பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, முதலியார் சங்க அலுவலகத்தில் நடக்கிறது.

நாளை காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம்; 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை தோடயமங்களம், குருதியானம், தஞ்சாவூர் தியாகராஜ பாகவதரின் அஷ்டபதி; 1:30 முதல் மாலை 4:00 மணி வரை கடையநல்லுார் ராஜகோபால் பாகவதரின் நாமசங்கீர்த்தனம்; 4:00 முதல் 6:30 மணி வரை செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணிய பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம்; 6:30 முதல் இரவு 9:00 மணி வரை ஈரோடு ராஜாமணி பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 9:30 முதல் மதியம் 12:00 மணி வரை தோடயமங்களம், புதுக்கோட்டை விக்னேஸ் பாகவதரின் குருதியானம்; 12:00 முதல் 2:30 மணி வரை அஷ்டபதி, தாரங்கம், சென்னை சத்குரு ஞானானந்த பஜனை மண்டலியின் பஞ்சப்படி; 2:30 முதல் மாலை 5:00 மணி வரை கோவிந்தபுரம் அரவிந்த் சூடாமணி பாகவதரின் தியான கீர்த்தனைகள்; 5:00 முதல் இரவு 10:00 மணி வரை பூஜை, திவ்யநாமம், ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், சுந்தரம் பாகவதர், ராஜசிம்மன் பாகவதர், மும்பை சத்யநாராயணா பாகவதரின் தோலோற்சவம் நடக்கிறது.

அக்., 12ம் தேதி கோபாலகிருஷ்ணா பாகவத சுவாமி ஜெயந்தியை முன்னிட்டு, காலை 8:00 முதல் 9:00 மணி வரை புதுக்கோட்டை நரசிம்ஹா பாகவதரின் உஞ்சவிருத்தி; 9:00 முதல் 10:00 மணி வரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், ஜெயராமன் பாகவதர், சீதாராமன் பாகவதருக்கு குரு பூஜை; 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை ராதா மாதவா கல்யாண உத்சவத்தை, ஸ்ரீஸ்ரீ ராமாவனந்த சரஸ்வதி சுவாமிகள் பஜனை வடிவில் நிகழ்த்துகிறார்.

பிற்பகல் 2:00 முதல் 3:00 மணி வரை ஸ்ரீஆதிமூர்த்தி பாகவதரின் ஹனுமந்த் பிரபாவம்; 3:00 முதல் மாலை 6:00 மணி வரை கடையநல்லுார் ரகுநாத் தாஸ் மஹாராஜின் ஹரி கீர்த்தனைகள்; 6:00 முதல் இரவு 9;00 மணி வரை திருவிசநல்லுார் ராமகிருஷ்ண பாகவதரின் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.

மேலும், விபரங்களுக்கு 97390 84469, 98455 37677 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us