/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாமஸ்மரண் - 2025 நிகழ்ச்சி துவக்கம்
/
நாமஸ்மரண் - 2025 நிகழ்ச்சி துவக்கம்
ADDED : அக் 11, 2025 05:11 AM

பெங்களூரு: நா மஸ்மரண் - 2025 சார்பில், மூன்று நாட்கள் நடக்கும் 23ம் ஆண்டு புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி, ஹலசூரு ஏரி அருகில் உள்ள முதலியார் சங்கத்தில் நேற்று துவங்கியது.
பெங்களூரு, பானஸ்வாடி ஓ.எம்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள நாமஸ்மரண் சார்பில், ஆண்டிற்கு ஒரு முறை, பெங்களூரில் புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் 23ம் ஆண்டு, புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி, ஹலசூரு ஏரி அருகில் உள்ள, முதலியார் சங்கத்தில் நேற்று துவங்கியது. அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ சக்ரம் ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, தோடயமங்களம், குருதியானம், தஞ்சாவூர் தியாகராஜ பாகவதரின் அஷ்டபதி நடந்தது.
மதியம் 1:30 முதல் மாலை 4:00 மணி வரை கடையநல்லுார் ராஜகோபால் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. இதற்கு, ஹொஸ்கோட் கிருஷ்ணா ஆஷ்ராய் கல்வி டிரஸ்ட் மாணவர்கள் நடனம் ஆடினர். மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, ஈரோடு ராஜாமணி பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.