/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசியல்வாதிகளுடன் 'டேட்டிங்' நம்ரதா கவுடாவுக்கு அழைப்பு
/
அரசியல்வாதிகளுடன் 'டேட்டிங்' நம்ரதா கவுடாவுக்கு அழைப்பு
அரசியல்வாதிகளுடன் 'டேட்டிங்' நம்ரதா கவுடாவுக்கு அழைப்பு
அரசியல்வாதிகளுடன் 'டேட்டிங்' நம்ரதா கவுடாவுக்கு அழைப்பு
ADDED : மே 15, 2025 11:19 PM

பெங்களூரு: அரசியல்வாதிகளுடன் டேட்டிங் செய்ய வரும்படி, நடிகை நம்ரதா கவுடாவுக்கு, சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபர் அழைப்பு விடுத்து உள்ளார்.
கன்னட சின்னத்திரை தொடரான, 'நாகினி'யில் நடித்து பிரபலம் ஆனவர் நம்ரதா கவுடா, 32. கன்னட பிக்பாஸ் 10வது சீசனிலும் பங்கேற்றார். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நம்ரதா கவுடாவின் இன்ஸ்டாகிராமிற்கு குறுந்தகவல் அனுப்பிய ஒருவர், 'எனக்கு பல அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களுடன் நீங்கள் டேட்டிங் செய்ய வாருங்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள். அதை கொடுக்க தயாராக உள்ளோம். உங்களை பற்றி எந்த தகவலும் வெளிவராத மாதிரி பார்த்து கொள்கிறோம்' என்று கூறி இருந்தார்.
அந்த குறுந்தகவலை, 'ஸ்கீரின்ஷாட்' எடுத்த நம்ரதா கவுடா, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 'மரியாதையாக, நீங்கள் இதை நிறுத்தி கொள்ளுங்கள்' என்றும் பதிவிட்டு இருக்கிறார். போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. அந்த பதிவை பார்ப்பவர்கள் நம்ரதா கவுடாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.