/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்தினி இட்லி, தோசை மாவு மைசூரில் இன்று அறிமுகம்
/
நந்தினி இட்லி, தோசை மாவு மைசூரில் இன்று அறிமுகம்
ADDED : மே 14, 2025 11:04 PM

மைசூரு: மைசூரு நகரில் இன்று முதல், நந்தினியின் இட்லி, தோசை மாவு கிடைக்கும்.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நந்தினி பிராண்ட் பால் பொருட்கள் பிரசித்தி பெற்றவை.
கடந்த ஆண்டு டிசம்பரில் நத்தினி இட்லி, தோசை மாவை, முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.
கைக்கு எட்டும் விலையில் தரமான மாவு கிடைப்பதால், மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று முதல் மைசூரிலும் நந்தினி மாவு அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, மைசூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் செலுவராஜு கூறியதாவது:
பல கட்டங்களில் பரிசோதனை நடத்தி, நந்தினி பிராண்ட் இட்லி, தோசை மாவு மார்க்கெட்டில் கொண்டு வரப்பட்டது. இன்று முதல் மைசூரில், மார்க்கெட்டுகள், நந்தினி பால் பூத்களில் மாவு கிடைக்கும். வரும் நாட்களில் பால் பாக்கெட்டுகளை, வீடு, வீடாக கொண்டு சேர்ப்பது போன்று, நந்தினி இட்லி, தோசை மாவை சப்ளை செய்ய ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.