/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.10க்கு நந்தினி பால், தயிர் விற்பனைக்கு வருகிறது
/
ரூ.10க்கு நந்தினி பால், தயிர் விற்பனைக்கு வருகிறது
ரூ.10க்கு நந்தினி பால், தயிர் விற்பனைக்கு வருகிறது
ரூ.10க்கு நந்தினி பால், தயிர் விற்பனைக்கு வருகிறது
ADDED : ஜன 25, 2026 05:19 AM

பெங்களூரு: நந்தினி பால், தயிர் சிறிய பாக்கெட்டுகளில் பத்து ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.
கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் தயாரிப்பான 'நந்தினி' பால் தயாரிப்பு பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நந்தினி பாலின் தரம் சிறப்பாக இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
இந்நிலையில், நந்தினி பால், தயிரின் சிறிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 160 மி.லி., பால் பாக்கெட் 10 ரூபாய்க்கும்; 140 மி.லி., தயிர் பாக்கெட் 10 ரூபாய்க்கும் விரைவில் விற்பனைக்கு வரும் தெரிகிறது.
சிறிய அளவிலான பாக்கெட்டுகள் பிரம்மச்சாரிகளை குறிவைத்து விற்பனைக்கு வருவதாக அதிகாரி தெரிவித்தார். இந்த சிறிய பாக்கெட் பால், தயிர் ஆகியவை முதலில் பெங்களூரு நகர்ப்புறத்திலே விற்பனைக்கு வரும். மற்ற மாவட்டங்களில் விற்கப்படும் என கே.எம்.எப்., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கே.எம்.எப்., நிர்வாக இயக்குநர் சிவசாமி, முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து எடுத்து கூறினார்.

