/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்தினி இட்லி, தோசை மாவு விற்பனையை அதிகரிக்க திட்டம்
/
நந்தினி இட்லி, தோசை மாவு விற்பனையை அதிகரிக்க திட்டம்
நந்தினி இட்லி, தோசை மாவு விற்பனையை அதிகரிக்க திட்டம்
நந்தினி இட்லி, தோசை மாவு விற்பனையை அதிகரிக்க திட்டம்
ADDED : ஏப் 22, 2025 05:12 AM

பெங்களூரு: கே.எம்.எப்.,பின் 'நந்தினி பிராண்ட்' இட்லி, தோசை மாவு உற்பத்தியை அதிகரிக்க கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின், 'நந்தினி' என்ற பெயரில் பால் உட்பட, பல விதமான உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்கிறது. இவற்றுக்கு மக்களிடையே அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
கே.எம்.எப்., அறிமுகம் செய்த நந்தினி இட்லி, தோசை மாவு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. நந்தினி இட்லி மாவு அமோகமாக விற்பனை ஆவதால், குஷி அடைந்த கே.எம்.எப்., உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது மாதந்தோறும் 500 கிலோ மாவு விற்பனையாகி வருகிறது. வரும் மாதம் முதல், 5,000 கிலோ மாவு விற்பனை செய்ய, கே.எம்.எப்., இலக்கு நிர்ணயித்துள்ளது.
முதற்கட்டமாக பெங்களூரில் மட்டும், இட்லி, தோசை மாவு விற்பனையை துவக்கியிருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மைசூரு, மங்களூரு, துமகூரு, ஹூப்பள்ளி உட்பட முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்த கே.எம்.எப்., திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் வழியாகவும், மாவு ஆர்டர் செய்யலாம். ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட், ஜிப்டோ என, மற்ற இ - காமர்ஸ் நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் என கே.எம்.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.