/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பால், பானம் தயாரிப்பில் நந்தினிக்கு 4வது இடம்
/
பால், பானம் தயாரிப்பில் நந்தினிக்கு 4வது இடம்
ADDED : ஜூன் 29, 2025 11:06 PM

பெங்களூரு: தேசிய அளவில் உணவு மற்றும் பானம் தயாரிப்பில் நந்தினி நிறுவனம் நான்காம் இடத்தை பிடித்து உள்ளது.
கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான 'நந்தினி' ஏராளமான பால் உற்பத்தி பொருட்களை தயாரித்து வருகிறது. இதுன் தயாரிப்புகள், பல மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லண்டனை சேர்ந்த, 'பிராண்ட் பைனான்ஸ்' நிறுவனம், பல நாடுகளில் உள்ள பால் தயாரிப்பு, உணவு நிறுவனங்கள் குறித்து நடத்திய ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
நம் நாட்டில், உணவு மற்றும் பானம் பிரிவில், 'நந்தினி' தேசிய அளவில் நான்காம் இடத்தை பிடித்து உள்ளது. மேலும், நாட்டில் உள்ள மதிப்பு மிக்க 'டாப் 100' இந்திய பிராண்டுகளில் 38வது இடத்தை பிடித்து உள்ளது. இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் சித்தராமையாவும் தன் 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.