தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி

 மேல்சபை விதிகள் புத்தகம் கிழித்து எறிந்த நாராயணசாமி


ADDED : ஜன 29, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மேல்சபை நியாயமான முறையில் நடக்கவில்லை' என்று கூறி, மேல்சபையின் நடைமுறை தொடர்பான புத்தகத்தை, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அவமதித்த, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மேல்சபையில் நேற்று காலை பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மேல்சபையை மதியம் வரை, தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஒத்திவைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின், மேல்சபை மீண்டும் துவங்கியதும், பா.ஜ., உறுப்பினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி, பசவராஜ் ஹொரட்டி கூறினார்.

அப்போது திடீரென கோபம் அடைந்த, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மேல்சபை நியாயமான முறையில் நடக்கவில்லை என்று கூறி, மேல்சபையின் நடைமுறை மற்றும் உறுப்பினர்கள் நடத்தை தொடர்பான புத்தகத்தை கிழித்து எறிந்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேல்சபையை அவமதித்த சலவாதி நாராயணசாமியை வெளியேற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட பசவராஜ் ஹொரட்டி, எதிர்க்கட்சி தலைவர் அவசரப்பட்டு புத்தகத்தை கிழித்து விட்டார். அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சலவாதி நாராயணசாமி பேசுகையில், ''சபை முறையாக செயல்படவில்லை என்பதே, எனது ஆட்சேபனை. நான் சபையை அவமதிக்கவில்லை,'' என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us