தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமி பாலியல் பலாத்காரம் பக்கத்து வீட்டு நபர் கைது

 சிறுமி பாலியல் பலாத்காரம் பக்கத்து வீட்டு நபர் கைது

 சிறுமி பாலியல் பலாத்காரம் பக்கத்து வீட்டு நபர் கைது


ADDED : மே 15, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர்: தாயை இழந்து தவித்த, 8 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

பீதர் மாவட்டத்தின், கிராமம் ஒன்றில், எட்டு வயது சிறுமி, தன் பெற்றோருடன் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன், தாய் இறந்ததால், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். தந்தை பணிக்கு செல்லும் போது, மகளை வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தனராஜ் காம்பளே, 35. இவர், சிறுமி தினமும் தனியாக இருப்பதை கவனித்தார். நேற்று முன் தினம், சிறுமியின் தந்தை பணிக்கு சென்றார்.

இதற்காகவே காத்திருந்த தனராஜ் காம்பளே, சிறுமியிடம் நயமாக பேசி, தன் வீட்டுக்கு அழைத்து வந்து, பாலியல் பலாத்காரம் செய்தார். பணி முடிந்து தந்தை வீட்டுக்கு வந்த போது, நடந்த விஷயத்தை அவரிடம் அந்த சிறுமி கூறினார்.

தந்தை உடனடியாக பீதர் நகர மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். இதையடுத்து, அந்த கிராமத்துக்கு வந்த போலீசார், தனராஜ் காம்பளேவை கைது செய்தனர். அவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது. பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us