/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' அமைச்சர் வீட்டில் திருட்டு நேபாள தம்பதி ஓட்டம்
/
'மாஜி' அமைச்சர் வீட்டில் திருட்டு நேபாள தம்பதி ஓட்டம்
'மாஜி' அமைச்சர் வீட்டில் திருட்டு நேபாள தம்பதி ஓட்டம்
'மாஜி' அமைச்சர் வீட்டில் திருட்டு நேபாள தம்பதி ஓட்டம்
ADDED : ஆக 22, 2025 11:10 PM

சிக்கமகளூரு: முன்னாள் அமைச்சர் கோவிந்தே கவுடாவின் வீட்டில், பணம், தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓடிய நேபாள தம்பதியை, போலீசார் தேடுகின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவில் உள்ள மணிப்புரா எஸ்டேட், ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் கோவிந்தே கவுடாவுக்கு சொந்தமானது. இந்த எஸ்டேட்டில் அவரது மகன் வெங்கடேஷ் வசிக்கிறார். இவரது வீட்டில் 15 நாட்களுக்கு முன்பு நேபாள தம்பதி, பணிக்கு சேர்ந்தனர்.
உரிமையாளரின் வீட்டிலேயே, தம்பதிக்கு தங்க இடம் அளிக்கப்பட்டது. நேற்று முன் தினம் இரவு உணவு முடிந்த பின், வெங்கடேஷ் உறக்கத்தில் ஆழ்ந்தார். உறங்கிய பின், வீட்டின் அறையில் இருந்த, ஏழு லட்சம் ரூபாயும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடிக் கொண்டு, இரவோடு, இரவாக நேபாள தம்பதி தப்பியோடினர்.
காலையில் வெங்கடேஷ் குடும்பத்தினர் விழித்தபோது, திருட்டு நடந்திருப்பதும், நேபாள தம்பதி வீட்டில் இல்லாததும் தெரிந்தது. கொப்பா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேபாள தம்பதியை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.