தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாம்பார் வைப்பதில் தகராறு நேபாள காவலாளி கொலை

சாம்பார் வைப்பதில் தகராறு நேபாள காவலாளி கொலை

சாம்பார் வைப்பதில் தகராறு நேபாள காவலாளி கொலை


ADDED : ஜூன் 23, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தலகட்டபுரா: சாம்பார் வைப்பதில் ஏற்பட்ட தகராறில், சப்பாத்தி கட்டையால் அடித்து, நேபாள காவலாளி கொலை செய்யப்பட்டார். கொலையாளி கைது செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்தவர் ஜரிலால் பகதுார், 70. பெங்களூரின் தலகட்டபுராவில் 15 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவருக்கும், தலகட்டபுராவின் மகேந்திரா, 28, என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் தினமும் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஜரிலால் வீட்டில் வைத்து, ஜரிலாலும், மகேந்திராவும் மது அருந்தினர்.

இரவு உணவு சாப்பிட சப்பாத்தி தயார் செய்தனர். பின், சாம்பார் வைப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

கோபம் அடைந்த மகேந்திரா, சப்பாத்தி கட்டையை எடுத்து, ஜரிலால் தலையில் சரமாரியாக அடித்தார். பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

தப்பி ஓடிய மகேந்திராவை நேற்று காலை தலகட்டபுரா போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us