/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சாரம் தாக்கியதில் நேபாள இளைஞர் பலி
/
மின்சாரம் தாக்கியதில் நேபாள இளைஞர் பலி
ADDED : அக் 20, 2025 07:05 AM
சிக்கபல்லாபூர்: தீபாவளிக்காக உணவகத்தின் முன், மா இலை தோரணம் கட்டுவதற்காக, கடையின் மீது ஏறும் போது மின்சாரம் தாக்கி, நேபாளத்தை சேர்ந்த இளைஞர் பலியானார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம் ஹொன்னேனஹள்ளியில் நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிதாக உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில், நேபாளத்தை சேர்ந்த பதம், 24, என்ற இளைஞர் சமையல்காரராக பணியாற்றி வந்தார்.
தீபாவளியை ஒட்டி, கடையின் முன், மா இலை தோரணம் கயிறு கட்டுவதற்காக, உணவகம் முன் இருந்த சிறிய பெட்டி கடை மீது பதம் ஏறினார்.
எதிர்பாராத விதமாக, தாழ்வாக தொங்கிய மின்சார ஒயர் மீது அவரது கை பட்டவுடன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், பதம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.