தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீட்டை காலி செய்ய மறுத்ததால் தகராறு தாய்மாமாவை கொன்ற மருமகன் கைது

 வீட்டை காலி செய்ய மறுத்ததால் தகராறு தாய்மாமாவை கொன்ற மருமகன் கைது

 வீட்டை காலி செய்ய மறுத்ததால் தகராறு தாய்மாமாவை கொன்ற மருமகன் கைது


ADDED : மார் 05, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவேக்நகர்: வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், தாய்மாமாவை சாலையில் தள்ளி கொன்ற, மருமகன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு விவேக்நகர் ஆஸ்டின் டவுனில் வசித்தவர் இனாயத் பாஷா, 45. இவருக்கு திருமணமாகவில்லை. தன் சகோதரியின் வீட்டில் தனியாக வசித்தார்.

அந்த வீட்டை இன்னொருவருக்கு வாடகைக்கு கொடுக்க, இனாயத் பாஷாவின் சகோதரி முடிவு செய்தார். வீட்டை காலி செய்யும்படி சகோதரனிடம் கூறினார்.

ஆனால், இனாயத் பாஷா வீட்டை காலி செய்ய மறுத்ததால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 1ம் தேதி இரவு இனாயத் பாஷாவும், சகோதரியின் மகன் மஸ்ரூர் அகமதுவும், 26, ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

போதை தலைக்கு ஏறிய நிலையில், வீட்டை காலி செய்யும் விஷயத்தில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

கோபம் அடைந்த மஸ்ரூர் அகமது, இனாயத் பாஷாவை பிடித்து சாலையில் தள்ளினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்தார்.

அவரது உடலை அவசர, அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. தகவல் அறிந்த விவேக்நகர் போலீசார் அங்கு சென்று, இனாயத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக, மஸ்ரூர் அகமது போலீசில் புகார் அளித்தார். ஆனால், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, மஸ்ரூர் அகமது தள்ளி விட்டதில், இனாயத் பாஷா இறந்தது தெரிந்தது.

இதனால், மஸ்ரூர் அகமதுவை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us