தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஞ்., கவுன்சிலரை கொல்ல முயன்றவர்களுக்கு வலை

பஞ்., கவுன்சிலரை கொல்ல முயன்றவர்களுக்கு வலை

பஞ்., கவுன்சிலரை கொல்ல முயன்றவர்களுக்கு வலை


ADDED : அக் 28, 2025 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெலமங்களா: பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா இஸ்லாம்புரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சலீம் பாஷா, 50. இவர் நேற்று முன்தினம் மாலையில், தனது வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்தவர்களில் ஒருவர், சலீமை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில், சலீமின் வலது கையில் குண்டு துளைத்தது. பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

இதையடுத்து, சலீம் நெலமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை சீராக உள்ளது. இது குறித்து நெலமங்களா ரூரல் போலீசார், மர்ம நபர்கள் யார், கொலை செய்வதற்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி., நா கராஜ் கூறியதாவது:

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து துணை எஸ்.பி., ஜெகதீஷ் தலைமையிலான குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முன்பகை காரணமாக அரங்கேறி உள்ளது.

துப்பாக்கி சூட்டில் நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதே கிராமத்தை சேர்ந்தவர்களே துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, சலீமை கொலை செய்ய பல முயற்சிகள் நடந்து உள்ளன.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us