புதிய விளம்பர விதிகளால் ரூ.500 கோடி வருவாய் இலக்கு
புதிய விளம்பர விதிகளால் ரூ.500 கோடி வருவாய் இலக்கு
ADDED : ஜூலை 19, 2025 11:16 PM
பெங்களூரு: புதிய விளம்பர விதிகளின் மூலம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு மாநகராட்சியின் விளம்பர சட்டம் - 2024ன் படி, நகரில் உள்ள சாலையோரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பது குறித்து புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சாலையில் அகலத்தை பொறுத்து விளம்பரப் பலகைகளை இருபுறங்களிலும் வைத்துக் கொள்ளலாம். விளம்பரப் பலகையின் உயரம் 40 மீட்டருக்கும் மேல் இருக்கக்கூடாது. இரு விளம்பரப் பலகைகளுக்கு இடையே உள்ள துாரம் 175 மீட்டருக்கும் அதிகமாக இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் மாற்றங்கள் செய்ய, மாநகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் உண்டு.
போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்பட கூடிய இடங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது. பி.எம்.டி.சி., பஸ்களில் விளம்பரம் செய்து கொள்ளலாம். விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இந்த புதிய விளம்பர விதிகளின்படி, ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
