தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட் கண்டறிய புதிய செயலி அறிமுகம்

 மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட் கண்டறிய புதிய செயலி அறிமுகம்

 மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட் கண்டறிய புதிய செயலி அறிமுகம்


ADDED : மே 13, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அனைத்து நிறுவனங்களின் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை கண்டறிய செ யலி அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம், மின்சார வாகன உரிமையாளர்களின் அலைச்சல் குறையும் என நம்பப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை மாநில அரசு ஊக்குவிக்கிறது. மேலும், கர்நாடகாவில் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி, வாகன பதிவு கட்டணத்தில் முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனால், இந்தியாவிலேயே, மின்சார வாகன விற்பனையில் பெங்களூரு முன்னணியில் உள்ளது.

சவால் எரிபொருள் செலவு குறைவு போன்ற பல அனுகூலங்களை மின்சார வாகன உரிமையாளர்கள் அனுபவிக்கின்றனர். இருப்பினும், நீண்ட துாரம் பயணிக்கும் போது, வாகனத்தில் சார்ஜ் தீர்ந்து விட்டால் 'அதோ கதி' தான். அது மட்டுமின்றி, அருகிலுள்ள சார்ஜிங் பாயின்டுகளை கண்டறிவதும் சவாலான காரியமாக இருக்கிறது.

குறிப்பாக, பெங்களூரில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் சார்ஜிங் பாயின்டுகளை தேடி அலைவது கடினமான காரியமாக இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், யூ.பி.சி., எனும், 'யூனிபைட் பாரத் இ - சார்ஜ்' செயலியை நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி வெளியிட்டார்.

எளிதில் அறியலாம் இந்த செயலியில், நாடு முழுதும் உள்ள அனைத்து மின்சார வாகன சார்ஜிங் பாயின்டுகள் இருப்பிடத்தை எளிதில் அறிய முடியும். பிரதமர் மோடியின், 'இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், இந்த செயலி அறிமுகமானது.

இச்செயலியில், அனைத்து தனியார் நிறுவனங்களின் சார்ஜிங் பாயின்ட்களை எளிதில் கண்டறிய முடியும். யு.பி.ஐ., செயலிகள் போல யூ.பி.சி., செயலியும் பெரிய வெற்றியடையும் என கூறப்படுகிறது.

இது குறித்து, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

யூ.பி.சி., செயலி, இந்தியாவின் மின்சார வாகன பயன்பாட்டில் மைல்கல்லாக அமையும். இச்செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து தனியார் நிறுவன சார்ஜிங் பாயின்ட்களையும் ஒரே செயலியின் கீழ் அறிய முடியும். தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

சார்ஜிங் பாயின்டுகளின் இருப்பிடம், சார்ஜர் வகை, மின்சார அளவு, சார்ஜிங் செய்ய ஆகும் செலவு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலமே கட்டணத்தை செலுத்தலாம். சார்ஜிங் பாயின்டுகளை தேடி அலைவது இந்த செயலியை பயன்படுத்தும் போது குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us