தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க புதிய செயலி: அமைச்சர் தகவல்

எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க புதிய செயலி: அமைச்சர் தகவல்

எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க புதிய செயலி: அமைச்சர் தகவல்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘ ‘ சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மொபைல் போன் செயலி வெளியி டப்படும்,’’ என, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சமையலுக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இதை உணராமல் பலர், மீண்டும், மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மொபைல் செயலி வெளியிடப்படும். அடுத்த மூன்று மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரும்.

சுகாதார துறை அமைச்சராக, மக்களின் ஆரோக்கியத்தை காத்து, மருத்துவமனைகளின் எண்ணிக்கையை குறைப்பதே, எனது குறிக்கோள். நோய்களால் மக்கள் பாதிப்படைவதை தடுத்து, அடுத்த, 10 ஆண்டுகளில், நோயாளிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இத்திட்டம் முதற்கட்டமாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி என, நான்கு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதன் வெற்றியைக் கவனித்து, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us