தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தென்மேற்கு ரயில்வே அணிக்கு தேர்வாகியுள்ள எல்.ஆர்.சேத்தன்

தென்மேற்கு ரயில்வே அணிக்கு தேர்வாகியுள்ள எல்.ஆர்.சேத்தன்

தென்மேற்கு ரயில்வே அணிக்கு தேர்வாகியுள்ள எல்.ஆர்.சேத்தன்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் எல்.ஆர்.சேத்தன், 26. இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்திலேயே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் உள்ளார்.

கல்லுாரி அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று சாதனை புரிந்தார். இந்த சமயத்தில், தொடக்க அதிரடி ஆட்டக்காரராக உருமாறினார். தான் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சராக மாற்றுவதில் கைதேர்ந்தவராக உருமாறினார்.

கடந்த 2022ம் ஆண்டு, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கர்நாடக அணியின் சார்பாக பங்கேற்றார். சிறப்பாக விளையாடினார். இதுவரை, கர்நாடக அணிக்காக எட்டு, 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று, 128 ரன்கள் எடுத்து உள்ளார். ஒரே போட்டியில் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.

இதனால், 2024ம் ஆண்டு மஹாராஜா கோப்பை போட்டியில், அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார். 2026ம் ஆண்டு மஹாராஜா கோப்பை போட்டியில், மைசூரு வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக, 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இவரு டைய ஆட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.

இதன் காரணமாக, தென்மேற்கு ரயில்வே அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

கிரிக்கெட் விளையாட்டில், கர்நாடக அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. அந்த கனவு, 2022ம் ஆண்டில் தான் நிறைவேறியது. இருப்பினும், கர்நாடக அணியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், ரயில்வே அணியில் எனது திறமையை காண்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us