தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சர்வதேச கராத்தே சாம்பியன் பட்டம் வென்ற சாணக்யா

சர்வதேச கராத்தே சாம்பியன் பட்டம் வென்ற சாணக்யா

சர்வதேச கராத்தே சாம்பியன் பட்டம் வென்ற சாணக்யா


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: தந்தையின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், 16 நாடுகளை சேர்ந்த வீரர்களை வீழ்த்தியுள்ள, 13 வயது மாணவர் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தாவணகெரே மாவட்டம், ஹரிஹர் தாலுகாவின் ராஜனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரப்பா; புகைப்பட கலைஞர். இவரது மனைவி லதா, இல்லத்தரசி. இவர்களின் மகன் சாணக்யா, 13. கிராமத்தில் உள்ள அரசு உயர் துவக்க பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தந்தை புகைப்பட கலைஞர் மட்டுமின்றி, கராத்தே பயின்றவர். எனவே, சிறு வயதில் இருந்தே தந்தை கராத்தே பயிற்சி செய்வதை பார்த்து வந்த சாணக்யாவுக்கு, கராத்தே மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அக்., 30 முதல் நவ., 1ம் தேதி வரை பெங்களூரில் உள்ள கோரமங்களா உள் அரங்கில் உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 16 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் பங்கேற்ற சாணக்யா, தங்கப்பதக்கம் வென்றதுடன், ‘பேடட் பிளாக் பெல்ட்’ பிரிவில் உலக சாம்பியனா உருவெடுத்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

சாணக்யாவின் இந்த அற்புதமான சாதனைக்கு பின்னால், அவரின் தந்தை நாகேந்திரப்பா தான் உள்ளார். ‘பிளாக் பெல்ட்’ பெற்ற அவர், 25க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகிறார். கராத்தேயில் மகனின் ஆர்வத்தையும், திறமையையும் உணர்ந்து, அவரே மகனுக்கு குருவாக கராத்தே பயிற்சி அளித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மகனுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். தந்தையின் வழிகாட்டுதலால் இன்று உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

தன் வெற்றி குறித்து சாணக்யா கூறியதாவது:

பெங்களூரில் நடந்த உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 16 நாடுகளை சேர்ந்தவர்களை வீழ்த்தி, சாம்பியன் ஆனேன். என் சாதனைக்கு என் தந்தையே காரணம். அவரின் வழிகாட்டுதலின் கீழ் இன்று உலக சாம்பியனானேன்.

அவர் தொழில் ரீதியாக புகைப்பட கலைஞராக இருந்தாலும், எனக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். நான் உலக சாம்பியன் ஆகி, ஒலிம்பிக்கில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். நாட்டிற்கும், மாநிலத்திற்கும், என் ஊருக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாணக்யாவின் தந்தை நாகேந்திரப்பா கூறியதாவது:

நான் புகைப்பட கலைஞராக இருந்தாலும், எனக்கு தெரிந்த கராத்தேவை மகனுக்கு கற்றுக் கொடுத்தேன். எங்களுடையது ஏழ்மையான குடும்பம்.

எங்கள் கிராமத்தில், 25 மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறேன். என் மகன் முதல் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார்.

அவர் உலக கராத்தே சாம்பியன் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் என்ன செய்தாலும், அவனுக்கு பக்கபலமாக இருப்பேன்.

அவன், தேசிய அளவில் வளர்ந்து, குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பின்தங்கிய ஏழை, திறமையானவர்கள் தேசிய அளவில் வளர்ந்து ஜொலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us