யஷ்வந்த்பூர் – மட்கான் வழித்தடத்தில் 15ம் தேதி ‘ வந்தே பாரத்’ ரயில் சேவை
யஷ்வந்த்பூர் – மட்கான் வழித்தடத்தில் 15ம் தேதி ‘ வந்தே பாரத்’ ரயில் சேவை
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 07:24 PM
பெங்களூரு: யஷ்வந்த்பூர் – மட்கான் வந்தே பாரத் ரயில் சேவை, 15ம் தேதி முதல் துவங்க உள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரின் யஷ்வந்த்பூரில் இருந்து கோவாவின் மட்கானுக்கு 16 பெட்டிகள் கொண்ட இருக்கை வசதியுடன் கூடிய, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இன்று, இந்த ரயில் சேவையை, பெங்களூரில் இருந்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். வரும் 15ம் தேதியில் இருந்து யஷ்வந்த்பூர் – மட்கான்; மட்கான் – யஷ்வந்த்பூர் இடையே இருமார்க்கத்திலும் ரயில் சேவை துவங்கும்.
புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் யஷ்வந்த்பூரில் இருந்து காலை 7:35 மணிக்கு புறப்படும் ‘26655’ எண்ணுள்ள இந்த ரயில் இரவு 8:55 மணிக்கு மட்கான் சென்றடையும். வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் மட்கானில் இருந்து காலை 8:20 மணிக்கு புறப்படும் ‘26656’ எண்ணுள்ள ரயில், இரவு 9:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
ஷ்ரவணபெலகோலா, ஹாசன், சக்லேஷ்பூர், சுப்பிரமணியா ரோடு, கபகா புத்துார், மங்களூரு சந்திப்பு, உடுப்பி, குந்தாபூர், மூகாம்பிகை ரோடு, முருடேஸ்வரா, கோகர்ணா, கார்வார் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்.
இவ்வாறு கூறப்பட் டுள்ளது.
