/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் ஏட்டுக்கு புதிய தொப்பி அறிமுகம்
/
போலீஸ் ஏட்டுக்கு புதிய தொப்பி அறிமுகம்
ADDED : அக் 27, 2025 03:54 AM

பெங்களூரு: போலீஸ் ஏட்டுகளுக்கு புதிய வடிவிலான தொப்பி, நாளை முதல் அறிமுகமாக உள்ளது.
கர்நாடகாவில் போலீஸ் ஏட்டுகள் 'ஸ்லச்' எனும் சாய்வான தொப்பியை அணிகின்றனர். இந்த தொப்பி அணிவதால் சவுகரியமாக உணர முடியவில்லை என ஏட்டுகள் தங்கள் மேலதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து, தொப்பியை மாற்றுவது குறித்து கடந்த ஜூன் மாதம் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தெலுங்கானாவில் போலீஸ் ஏட்டுகள் அணியும் வடிவிலான தொப்பியை வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த தொப்பி நாளை முதல் அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக பெங்களூரில் உள்ள ஏட்டுகளுக்கு வழங்கப்படும். இதையடுத்து, மற்ற மாவட்டங்களுக்கு புதிய வடிவிலான தொப்பிகள் விநியோகிக்கப்படும் என மாநில போலீஸ் துறை தெரிவித்து உள்ளது.
பட விளக்கம்: police cao: தற்போது ஏட்டுகள் பயன்படுத்தும் தொப்பி.: new police hat: புதிய வடிவ தொப்பி. :

