/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் நகராட்சிக்கு புதிய ஆணையர்
/
கோலார் நகராட்சிக்கு புதிய ஆணையர்
ADDED : ஏப் 16, 2026 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: கோ லார் நகராட்சி ஆணையராக இருந்தவர் நவீன் சந்திரா. இவருக்கும், கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்துக்கும் இடையே உரசல் இருந்து வந்தது.
இதனால் அவரை மாற்றுமாறு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கோலார் நகராட்சிக்கு கே.எம்.ஏ.எஸ்., அதிகாரியை தான் ஆணையராக நியமிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று, கொப்பால் நகராட்சி ஆணையராக இருந்த வெங்கடேஷ் மாருதி நாகனுாரை, கோலார் நகராட்சி ஆணையராக நியமித்து கர்நாடக மாநில நகர வளர்ச்சித்துறை செயலர் மஞ்சுநாத் உத்தரவிட்டு உள்ளார். கோலாரில் இருந்த நவீன் சந்திராவுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.

