/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1,650 கோடியில் பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம்
/
ரூ.1,650 கோடியில் பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம்
ரூ.1,650 கோடியில் பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம்
ரூ.1,650 கோடியில் பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம்
ADDED : ஆக 10, 2025 08:37 AM
பெங்களூரு : பெங்களூரு சிவாஜிநகர் கப்பன் ரோடு பகுதியில், சின்னசாமி கிரிக்கெட் மைதானம் உள்ளது. மொத்தம் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிரிக்கெட் போட்டியை 32,000 பேர் பார்க்கும் வசதியும் உள்ளது.
நகரின் மையப்பகுதியில் மைதானம் இருப்பதால் போட்டிகள் நடக்கும்போது, மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஐ.பி.எல்., கோப்பையை ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில் ஜூன் 4ம் தேதி நடந்த பாராட்டு விழாவின்போது, 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட நீதி விசாரணை அறிக்கையில், பெரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, சின்னசாமி மைதானம் ஏற்றது இல்லை என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று, துணை முதல்வர் சிவகுமாரும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக அரசின் வீட்டுவசதி துறையின் கீழ் வரும், கர்நாடக வீட்டு வசதி வாரியம், பெங்களூரு ரூரல் சூர்யாநகரில் 100 ஏக்கரில் அதிநவீன விளையாட்டு வளாகத்தை கட்டவும், இதில் 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 80,000 பேர் அமர்ந்து, போட்டியை பார்க்கும் வகையில், புதிய மைதானம் கட்டவும் அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது.
இதற்கு நேற்று முன்தினம் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் மட்டுமின்றி, அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி வசதிகள், நீச்சல் குளம், விருந்தினர் மாளிகைககள், விடுதிகள், மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அமையலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மைதானம் நாட்டின் இரண்டாவது பெரிய மைதானமாக இருக்கும்.