/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாலுார் அரசு மருத்துவமனையில் புதிய 'டயாலிசிஸ்' மையம் திறப்பு
/
மாலுார் அரசு மருத்துவமனையில் புதிய 'டயாலிசிஸ்' மையம் திறப்பு
மாலுார் அரசு மருத்துவமனையில் புதிய 'டயாலிசிஸ்' மையம் திறப்பு
மாலுார் அரசு மருத்துவமனையில் புதிய 'டயாலிசிஸ்' மையம் திறப்பு
ADDED : ஆக 25, 2025 04:16 AM

மாலுார்: ''மாலுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் 9 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 72 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்,'' என்று மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கே.ஒய். நஞ்சே கவுடா தெரிவித்தார்.
மாலுார் அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை நேற்று நஞ்சேகவுடா திறந்து வைத்து பேசியதாவது:
மாலுாரில் டயாலிசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சைக்கு இயந்திர பற்றாக்குறை இருந்தது. தற்போது ஒன்பது இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், ஏழை, நடுத்தர நோயாளிகள் பயன் பெறுவர். 1962ல் கட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனை கட்டடம் மோசமான நிலையில் உள்ளது.
மருத்துவமனைக்கு புதிய கட்டடம் தேவை என சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் தெரிவித்தேன். அவரும் மிகுந்த ஆர்வம் காட்டி மாலுாரில் 10 ஏக்கரில், 45 கோடி ரூபாய் செலவில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு நிதி விடுவித்துள்ளார்.
மாலுாரில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் சித்தராமையா வர உள்ளார். அப்போது அரசு மருத்துவமனையின் புதிய கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.