தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் காங்., புதிய நிர்வாகிகள் நியமனம்

 தங்கவயல் காங்., புதிய நிர்வாகிகள் நியமனம்

 தங்கவயல் காங்., புதிய நிர்வாகிகள் நியமனம்


ADDED : ஜூலை 08, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகர காங்கிரசுக்கு, 20 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்து, இதற்கான நியமன உத்தரவு கடிதத்தை வழங்கினர்.

தங்கவயல் நகர காங்கிரசுக்கு இதுவரை தலைவர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ராஜகோபால், ஜெயபால், ராஜ மனோகர், ஸ்ரீதர்ராஜ் ஆகியோர் இருந்து வந்தனர். ஸ்ரீதர்ராஜ் தலைவராக பதவியில் இருந்த போது தான் கடைசியாக, கர்நாடக மாநில காங்கிரஸ் துணைத் தலைவர்களாக அனந்த கிருஷ்ணன், மோகன் ராஜ், பொருளாளராக சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீதர்ராஜ் மறைவுக்கு பிறகு மதலை முத்துவை தலைவர் ஆக்கினர். இவர் மட்டுமே தொடர்ந்து, 14 ஆண்டுகள் தலைவராக இருந்தார். ஆனால், மற்ற பதவிகளை மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகம் நியமிக்கவே இல்லை.

இந்நிலையில், தங்கவயல் நகர காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், புதிய பட்டியலை அறிவித்துள்ளார். மேலும், புதிய நிர்வாகிகளிடம் அதற்கான நியமன கடிதத்தையும் வழங்கினார்.

அதன் விபரம்:

துணைத்தலைவர்களாக ஓ.வி.டேவிட், எல்.அந்தோணி, அப்துல் கபீர், சுபாஷ் சந்தர், பொதுச் செயலர்களாக ஜெர்மன் ஜூலியஸ், பிரபாகரன் மற்றும் செயலர்களாக கே.ஆனந்தன் உள்ளிட்ட ஆறு பேர், இணைச் செயலர்களாக சி.சசிகுமார் உள்ளிட்ட ஆறு பேர், பொருளாளராக எம்.ஆனந்தகுமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக இடம் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us