sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கைதியுடன் குடும்பத்தினர் சந்திப்பு புதிய வழிகாட்டுதல் வெளியீடு

/

 கைதியுடன் குடும்பத்தினர் சந்திப்பு புதிய வழிகாட்டுதல் வெளியீடு

 கைதியுடன் குடும்பத்தினர் சந்திப்பு புதிய வழிகாட்டுதல் வெளியீடு

 கைதியுடன் குடும்பத்தினர் சந்திப்பு புதிய வழிகாட்டுதல் வெளியீடு


ADDED : மார் 10, 2026 06:00 AM

Google News

ADDED : மார் 10, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து குடும்பத்தினர் பேச, புதிய வழிகாட்டுதல்களை, சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் சிறைகளில் உள்ள, தண்டனை கைதிகளை சந்திக்க அவர்கள் குடும்பத்திற்கு, வாரத்திற்கு இரண்டு முறையும், விசாரணை கைதிகளை சந்திக்க, வாரத்திற்கு மூன்று முறையும் ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

சில சிறைகளில் கைதிகளை குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க வரும் போது உணவு, பழங்களுக்குள் மறைத்து வைத்து கஞ்சா, பீடி, மொபைல் போன்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், கைதிகளை குடும்பத்தினர் சந்திக்க புதிய வழிகாட்டுதலை சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று வெளியிட்டார்.

 கைதிகளை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி அளிப்பதற்கு, சிறை தலைமை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வ அனுமதி கட்டாயம்.

 சிறைக்கு வரும் கைதிகள் குடும்பத்தினர், உறவினர்கள் போலீசார் நடத்தும் சோதனைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

 நியமிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சந்திக்க வேண்டும்.

 அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடியும்.

 ஒரு கைதியை வாரத்தில் 5 பேருக்கு மேல் சந்திக்க அனுமதி இல்லை.

 கைதி, உறவினர்கள் சந்திப்பு சிறை அதிகாரியின் முன்பே நடக்க வேண்டும்.

 குடும்பத்தில் யாராவது மரணம் அல்லது அவசர சிகிச்சை பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்றால் டி.ஜி.பி., அனுமதி தேவை.

 மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியருக்கு கைதிகளை சந்திக்க மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அனுமதி.






      Dinamalar
      Follow us