/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய வீட்டில் படிகள் இடிந்து தம்பதி பலி
/
புதிய வீட்டில் படிகள் இடிந்து தம்பதி பலி
ADDED : மார் 10, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின், யலகட்டி கிராமத்தில் வசித்தவர் தேவப்பா சுகூர், 35. இவரது மனைவி சிவம்மா, 33. இருவரும் இரவு பகலாக உழைத்து பணம் சேர்த்தனர்.
அந்த பணத்தில் வீடு கட்ட துவங்கினர். கூலியாட்களை அமர்த்த பணம் இல்லாததால், தம்பதியே வீட்டை கட்டுவதில் ஈடுபட்டனர். பாதியளவு பணிகள் முடிந்தன. நேற்று காலை படிகளுக்கு கீழே நின்று, சுவருக்கு பிளாஸ்டரிங் செய் து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் படிகள் இடிந்து விழுந்ததில், தேவப்பாவும், சிவம்மாவும் பலத்த காயமடைந்து உயிர் இழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஹட்டி போலீசார், தம்பதியின் உடல்களை மீட்டனர்.

