/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய சிறையில் புதிய ஜாமர்கள்: பல்லாரி பொது மக்கள் பாதிப்பு
/
மத்திய சிறையில் புதிய ஜாமர்கள்: பல்லாரி பொது மக்கள் பாதிப்பு
மத்திய சிறையில் புதிய ஜாமர்கள்: பல்லாரி பொது மக்கள் பாதிப்பு
மத்திய சிறையில் புதிய ஜாமர்கள்: பல்லாரி பொது மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 26, 2025 06:38 AM
பல்லாரி : பல்லாரி மத்திய சிறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஜாமர்களால், சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்களுக்கு சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பல்லாரி மாவட்டத்தின் மையப்பகுதியில், பல்லாரி மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுப்பதற்காக, '2 ஜி நெட் ஒர்க் சிக்னலை' தடுக்கும், 10 ஜாமர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டன.
இந்த ஜாமர்கள் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக செயல்படவில்லை. இதன் காரணமாக, 15ம் தேதி பழைய ஜாமர்கள் அகற்றப்பட்டு, '4 ஜி நெட் ஒர்க் சிக்னலை' தடுக்கும், புதிய ஜாமர்கள் பொருத்தப்பட்டன.
இந்த ஜாமர்களால், சிறைச்சாலையை சுற்றியுள்ள 2 கி.மீ., வரையிலான பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு சிக்னல்கள் கிடைப்பதில்லை. இதனால், பலரும் மொபைல் போனில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, மத்திய சிறைச்சாலை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியிடம், அப்பகுதியில் வசிக்கும் சிலர், நேற்று புகார் செய்தனர். 'ஜாமர் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் உறுதி அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர்.லதா கூறுகையில், ''சிறையில் உள்ள ஜாமர்களின்
எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன.
இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதாக புகார்கள் வந்தன. இவ்விஷயத்தில், உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.