sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மாநில ம.ஜ.த.,வுக்கு புதிய தலைவர்? மத்திய அமைச்சர் குமாரசாமி விளக்கம்

/

மாநில ம.ஜ.த.,வுக்கு புதிய தலைவர்? மத்திய அமைச்சர் குமாரசாமி விளக்கம்

மாநில ம.ஜ.த.,வுக்கு புதிய தலைவர்? மத்திய அமைச்சர் குமாரசாமி விளக்கம்

மாநில ம.ஜ.த.,வுக்கு புதிய தலைவர்? மத்திய அமைச்சர் குமாரசாமி விளக்கம்


ADDED : அக் 23, 2025 11:03 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: “மாநில ம.ஜ.த., தலைவர் மாற்றப்பட மாட்டார். அந்த பொறுப்பு என்னிடமே இருக்கும்,” என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

கடந்த 2024ல், கர்நாடக ம.ஜ.த., தலைவராக இருந்த இப்ராகிம், கட்சிக்கு எதிராக பேசினார். பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்ததில், அவருக்கு உடன்பாடு இல்லை. மதவாத கட்சியுடன், மதச்சார்பற்ற ம.ஜ.த., கைகோர்க்கக் கூடாது என, விமர்சித்தார். பகிரங்கமாக பேசியதால், அவரிடம் இருந்த மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

வேறு ஒருவரை மாநில தலைவராக்க, மேலிடம் ஆலோசித்தது. ஆனால் நெருக்கடியான சூழ்நிலையில் கட்சி இருந்ததால், மாநில தலைவராக யாரும் ஆர்வம் காட்டவில்லை. வேறு வழியின்றி, குமாரசாமியே மாநில தலைவரானார்.

அதன்பின் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு, குமாரசாமி வெற்றி பெற்றார். தற்போது மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். முக்கியமான துறையில் இருப்பதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மாநில ம.ஜ.த., தலைவர் பொறுப்பை நிர்வகிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதால், வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த, மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டும். நிகில் குமாரசாமியை மாநில தலைவராக்கலாம் என, சிலர் ஆலோசனை கூறுகின்றனர்.

ஆனால் சிலர், இப்போதைக்கு மாநில தலைவராக யாரையும் புதிதாக நியமிக்க வேண்டாம். நீங்களே தலைமை பொறுப்பில் இருங்கள் என, அறிவுறுத்துகின்றனர்.இந்த விவகாரம் குறித்து, பெங்களூரில் நேற்று குமாரசாமி அளித்த பேட்டி:

மாநில ம.ஜ.த., தலைவரை மாற்ற வேண்டாமென சில தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் சில தலைவர்கள் நிகில் குமாரசாமியிடம், பொறுப்பை ஒப்படைக்கும்படி ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், தற்போதைக்கு மாநில தலைவரை மாற்றுவது குறித்து, மேலிடம் ஆலோசிக்கவில்லை. மாநில தலைவர் மாற்றம் இல்லை. நானே தலைவராக இருப்பேன்.

பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இடையே, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். இதுகுறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், என்னுடன் ஆலோசனை நடத்தினர். பெங்களூருக்கு ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்படும். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அடுத்த 2028 சட்டசபை தேர்தலுக்கு, கூட்டணி கட்சிகள் தயாராகின்றன. இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்து, ஒருங்கிணைப்பு குழு குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us