/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு சி.சி.பி., போக்குவரத்துக்கு புதிய அதிகாரிகள்... நியமனம்! கர்நாடகாவில் ஒரே நாளில் 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ADDED : ஜூலை 16, 2025 08:24 AM

நிர்வாக காரணங்களுக்காக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, கர்நாடக அரசு அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையம் உத்தரவிட்டது.
பெங்களூரில் சென்ட்ரல், மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, ஒயிட்பீல்டு என 8 போலீஸ் மண்டலம் உள்ள நிலையில், தற்போது புதிதாக எலக்ட்ரானிக் சிட்டி, வடமேற்கு, தென்மேற்கு போலீஸ் மண்டலங்கள் உருவாக்கப்பட்டு புதிய டி.சி.பி.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மூன்று மண்டலங்களின் கீழ் எந்தெந்த போலீஸ் நிலையங்கள் வரும் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மேற்கண்ட 35 அதிகாரிகள் இடமாற்றத்தை பார்க்கும் போது, பெரும்பாலான இடமாற்றங்கள் பெங்களூரில் நடந்துள்ளது தெரிய வருகிறது. இதன்மூலம் பெங்களூரு போலீஸ் துறையில், அரசு பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.
ஆனால் பெங்களூரு சி.சி.பி., இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ஹிலோரிக்கு, பெங்களூரில் நடந்த ஐ.எம்.ஏ., நகைக்கடை மோசடி வழக்கில் தொடர்புள்ளதாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தங்கவயல் எஸ்.பி.,யாக சிவன்சு ராஜ்புத் நியமிக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
இடமாற்றம் செய்யப்பட்ட 35ல் ஏழு பேர் பெண் அதிகாரிகள்.