/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்வி கற்பிக்கும் சிறைச்சாலை ராம்நகரில் புது திட்டம் அறிமுகம்
/
கல்வி கற்பிக்கும் சிறைச்சாலை ராம்நகரில் புது திட்டம் அறிமுகம்
கல்வி கற்பிக்கும் சிறைச்சாலை ராம்நகரில் புது திட்டம் அறிமுகம்
கல்வி கற்பிக்கும் சிறைச்சாலை ராம்நகரில் புது திட்டம் அறிமுகம்
ADDED : செப் 10, 2025 10:08 PM

ராம்நகர் : ராம்நகர் சிறையில், கைதிகளுக்கு கல்வி கற்பித்து, அவர்களின் மன மாற்றத்துக்கு, அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இங்கு கைதிகளே ஆசிரியர்கள், கைதிகளே மாணவர்கள்.
சிறைகளில் கஞ்சா, போதைப் பொருள், மொபைல் போன் பயன்படுத்துவது, கைதிகள் சொகுசாக வாழ்க்கை நடத்துவது என,Cபல முறைகேடுகளால் சிறைகள் விவாதங்களுக்கு ஆளாகின்றன. ஆனால் ராம்நகர் சிறையில், கைதிகளுக்கு கல்வி அறிவு அளிக்கப்படுகிறது. கல்வியறிவு இல்லாத காரணத்தால், பலரும் குற்றங்களில் ஈடுபட்டு, சிறைக்கு வருகின்றனர்.
இவர்களுக்கு கல்வி கற்பித்து, நல்வழிப்படுத்த, ராம்நகர் சிறை அதிகாரிகள், 'கல்வியால் மாற்றம்' என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, சிறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக சிறைக்கு வரும் பல கைதிகளுக்கு, கல்வி அறிவே இல்லை. அவர்கள் மீது என்னென்ன குற்றச்சாட்டுளின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது, வக்கீல்களின் உதவி பெறுவது என, எந்த விஷயமும் தெரிவது இல்லை. படிப்பறிவு இருந்தால், எப்.ஐ.ஆரை படிக்கவும், வக்கீல்களுடன் பேசவும் உதவியாக இருக்கும்.
இதை மனதில் கொண்டு, ராம்நகரில் கைதிகளுக்கு கல்வி கற்றுத் தருகிறோம். இதனால் அவர்கள் விடுதலையாகி, வெளியே சென்ற பின் அவர்களின் வாழ்க்கையை வகுத்து கொள்ள உதவியாக இருக்கும். எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு, கல்வி போதிப்பதும் கைதிகள்தான்.
வழக்கொன்றில் விசாரணை கைதியாக உள்ள உமேஷ் என்பவர் முதுகலை பட்டதாரியாவார். கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை, இவர் ஏற்றுள்ளார். இதற்காக இவருக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
கல்வி கற்பவர்களில், கன்னடர்கள் மட்டுமின்றி, பீஹார், உத்தர பிரதேசம், அசாம் உட்பட, வெளி மாநிலத்தவரும் கூட, கன்னடம் கற்கின்றனர்.
ஆண்டுதோறும் 30 முதல் 35 பேர் கல்வியறிவு பெறுகின்றனர். சிறையில் கைதிகளுக்கு புத்தகம் படிக்க அனுமதி உள்ளது. இவர்களுக்காக நுாலகமும் உள்ளது.
டேபிள், இருக்கை, மின் விசிறி என, அனைத்து வசதிகளும் உள்ளன. கைதிகளும் ஆர்வமாக கல்வி கற்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.