தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மலையேற்றம் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு வழிகாட்டி இன்றி செல்ல அனுமதியில்லை என கண்டிப்பு

 மலையேற்றம் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு வழிகாட்டி இன்றி செல்ல அனுமதியில்லை என கண்டிப்பு

 மலையேற்றம் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு வழிகாட்டி இன்றி செல்ல அனுமதியில்லை என கண்டிப்பு


ADDED : ஏப் 18, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்பிற்காக, எஸ்.ஓ.பி., என்ற, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாநிலத்தில் வனத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மலையேற்ற பாதைகளிலும் வழிகாட்டி இல்லாமல் யாரும் மலையேற்றம் செய்ய அனுமதியில்லை,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்பிற்காக வகுக்கப்பட்ட, எஸ்.ஓ.பி., என்ற, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் வனத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மலையேற்ற பாதைகளிலும், வழிகாட்டி இல்லாமல் யாரும் மலையேற்றம் செல்ல அனுமதியில்லை.

முன்பதிவு கட்டாயம் மலையேற்றம் செல்லும் ஒவ்வொரு, 10 நபர்களுக்கும், ஒரு உள்ளூர் வழிகாட்டி இருப்பார். அனைத்து மலையேற்ற பாதைகளிலும் ஒரு பஸ்சில் அதிகபட்சமாக, 150 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

மலையேற்றத்திற்கு வருவோர், இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாளில், ஒரே ஒரு மலையேறுபவர் மட்டும் முன்பதிவு செய்திருந்தாலும், அவருக்கான வழிகாட்டி வசதி வழங்கப்படும். வழிகாட்டி இல்லாமல் மலையேற அனுமதியில்லை.

குடகு மாவட்டம் தடியாண்டமோலுக்கு கேரளாவில் இருந்து வந்திருந்த பெண் காணாமல் போய், மூன்று நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். அதேபோன்று சிக்கமகளூரில் மாணிக்யதாராவிற்கு குடும்பத்தினருடன் வந்திருந்த சிறுமியின் உடல், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மலையேறுபவர்களின் பாதுகாப்புக்காகவே எஸ்.ஓ.பி., பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

வாக்கி - டாக்கி ஒவ்வொரு மலையேற்றத்தில் இருக்கும் வழிகாட்டிக்கும், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய வாக்கி - டாக்கி வழங்கப்படும். அதுபோன்று மலையேற்ற பாதையின் வரைபடத்தை கொண்ட செயலி, மலையேறும் ஒவ்வொருவரின் மொபைல் போனிலும் பதிவேற்றம் செய்யப்படும். தவறுதலாக பாதை மாறி செல்பவர்களை கண்டுபிடிக்க இந்த செயலி உதவியாக இருக்கும்.

மலையேற்றம் துவங்கும் முன், மலையேற்றத்தின் துாரம், கால அளவு, அடிப்படை குறித்தும், வனவிலங்குகளை எதிர்கொண்டால், என்ன செய்ய வேண்டும். மலையேற்ற பாதையில் சத்தமிடும் கருவிகள், கூர்மையான உலோக பொருட்கள், ஆயுதங்கள் அனுமதிக்கப்படாது என்பது குறித்தும் முகாமில் விளக்கப்படும்.

மலை அடிவாரத்தில் பெண்கள், ஆண்களுக்கு என தனித்தனி கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அடிவாரத்தில் உள்ள முகாமுக்கு செல்லும் மலையேற்ற பாதையில், வழிகாட்டி பலகையும், அம்புகுறியும் வைக்கப்படும்.

வழிகாட்டிகளின் பணி மலையேறுபவர்கள் தங்களை முந்தி சென்று விட்டனரா அல்லது பின் தங்கிவிட்டனரா என்பதை வழிகாட்டிகள் உறுதி செய்ய வேண்டும். அடிவார முகாமிலும், ஓய்வெடுக்கும் இடத்திலும் மலையேறுபவர்கள் கணக்கிடப்படுவர்.

அவர்கள், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் தங்கள் வாக்கி - டாக்கிகள் மூலம் அடிவார முகாமில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு மலையேறுபவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்குள் வாக்கி டாக்கி மூலம் வழிகாட்டி தொடர்பு கொள்ளவில்லை என்றால், அடிவாரத்தில் உள்ள ஊழியர்கள், வழிகாட்டிகளை தொடர்பு கொள்வர்.

பெற்றோர் அனுமதி சிறுவர்கள் மலையேறுகின்றனர் என்றால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதுபோன்று மூத்த குடிமக்கள் மலையேற்றத்தை மேற்கொள்வதற்கு தங்களின் உடல் தகுதிக்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

உடல் நல பிரச்னை உள்ளவர்கள், தங்களை கவனித்து கொள்ள, ஒரு முதலுதவி பெட்டியை உடன் எடுத்து செல்ல வேண்டும். பிளாஷ் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை எடுத்து செல்வது, பைகள் எடுத்த செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us