/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் ஆதரவாளர்கள் மீதே சின்னையா புகார்
/
தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் ஆதரவாளர்கள் மீதே சின்னையா புகார்
தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் ஆதரவாளர்கள் மீதே சின்னையா புகார்
தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் ஆதரவாளர்கள் மீதே சின்னையா புகார்
ADDED : டிச 21, 2025 05:18 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில், ஜாமினில் வெளிவந்த சின்னையா, தனது உயிருக்கு ஆபத்து என, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஐந்து பேர் மீதே போலீசில் புகார் அளித்துள்ளார்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த வழக்கில், சின்னையா என்பவரை, எஸ்.ஐ.டி., என்ற சிறப்பு புலனாய்வு குழு, ஆகஸ்ட், 23ம் தேதி கைது செய்தது.
விசாரணைக்கு பின், ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 24ம் தேதி தட்சிண கன்னடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
12 நிபந்தனைகள் அதாவது, 'வரும் காலத்தில் பொய் புகார் அளிக்கக்கூடாது; ஜாமினில் சென்ற பின் தலைமறைவாகக் கூடாது; சாட்சிகளை மிரட்டக்கூடாது; ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கக்கூடாது; விசாரணைக்கு சரியாக ஆஜராக வேண்டும்; என்பது உட்பட 12 நிபந்தனைகளுடன், சின்னையாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு சின்னையா, கடந்த 18ம் தேதி ஜாமினில் வெளியே வந்தார். இவர், அதே தினம் தர்மஸ்தலா போலீஸ் நிலையத்துக்கு சென்று உள்ளார். ராஷ்ட்ரிய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பின் தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா, யு டியூபர் சமீர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அங்கிருந்த போலீசார், பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர்.
வழக்குப்பதிவு இதையடுத்து, பெல்தங்கடி போலீஸ் நிலையத்துக்கு சென்று ஐந்து பேர் மீதும் புகார் அளித்தார். 'இவர்கள் ஐந்து பேரால் தனக்கும், தனது மனைவி மல்லிகாவின் உயிருக்கும் ஆபத்து. எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இந்த ஐந்து பேரே தன்னை பொய் புகார் அளிக்கும்படி வற்புறுத்தினர்' என்று புகாரில் கூறியுள்ளார். பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக நேற்று தெரிவித்து உள்ளனர்.
சின்னையா புகார் அளித்த ஐந்து பேரும், முந்தைய காலத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீதே சின்னையா புகார் அளித்தது இவ்வழக்கில் புதிய திருப்பு முனையாக மாறி உள்ளது.

